கண் கண்ட சுகம்.
பூவரச மரத்தில்
ஜோடியான இரு தூக்கணாங்குருவிகள்
இணை சேரத் துடிக்கும்
நெஞ்சங்கள்.
உதட்டில் வெற்றிலைச் சிகப்பு
விளையாடும் புன்சிரிப்பு.
எனை உல்லாசமாகப் பார்த்தபோது
இதயப்பறவை
நெஞ்சக் கூட்டுக்குள்
அடங்கமாட்டேனென்று
பிடிவாதம் பிடித்தபோது
போதும் போதும்
உதடு இப்படிச் சிவந்தால்
பொண்டாட்டி மேல் அளவுக்கு மீறிய
ஆசை வச்சிருப்பாங்களாம்
என்றது பூஜை வேளையில்
கரடியாய் நுழைந்த
அத்தையின் குரல்வளம்
திடுக்கிட்டுக்
கண் விழித்தால்..
தாழ்ந்து கவிந்தன
கற்பனையில் சுகம் கண்ட
கன்னியின்
கனவு விழிகள்.
-- 82 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))