பஸ்நெரிசலில் :-
கண்ணுக்குள்ளே
ஒரே தூசிக்குளம்.
பொரித்தெடுத்த கடலையின்
உப்புப் பொறிச்சலாய்
வியர்வைக் காலங்கல்.
பசபசத்து ஒட்டிக் கொள்ளும்.
கசகசத்து அப்பிக் கொள்ளும்.
குவியல் குவியலாய்
மூஞ்சியில் எண்ணெய் வடிசல்.
கனிந்த குலைவாழைப் பழங்களாட்டம்.
கொளகொளத்து உருகி உதிரும்
மாமிசக் கும்பல்
பிதுங்கி வெளிவந்தால்
ஆள் பாதி ! ஆடை பாதி. ! மீதி..?
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))