இலையுதிர் காலத்தில் நிகழ்காலங்கள் :-
காலடிச் சுவட்டை என் கால்களே அழிக்கின்றன.
காலனின் சுவடும் கண்முன்னே தெரிகின்றது.
பாவம் என்னை அணைக்கத் துடிக்கின்றதா அல்லது
நான் பாவத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றேனா.
வசந்தகால இலைகள் வாடி வதங்கி
இலையுதிர்காலக் காற்றால் சருகாக உதிர்கின்றன.
சருகுகளும் காலடியில் மிதிபட்டு நொறுங்கிப்
பொடிபட்டுத் தூசிகளாகப் பறக்கின்றன.
புழுதிப் படலத்தில் சிக்கிக் கொண்டு
வெளிவரத் துடிக்கும் உயிர்.
அக்கினி ஜூவாலை
நெருப்புக்குள் மூழ்கும் வண்ணத்துப் பூச்சி.
துன்பத் தீச்சுவாலைகளின் தகிப்பு.
வெளியில் குளிர்ந்த நீரோட்டம்போலிருந்து
உள்ளே குமுறும் எரிமலைக் கொந்தளிப்பு
பொங்கி வழியும் இரத்தக் குழம்பு
இனம் புரியாத சோகம்.
இதயத்தைக் கவ்விப் பிடிக்கின்றது.
நீறுபூத்த நெருப்பாகக்
கனறும் நினைவுகள்.
பாதிதூரம் சென்றபின்
பள்ளத்தில் முடிந்த பாதை
குதிப்பதா ? அல்லது
வந்த வழியே திரும்புவதா ?
ஏன் இந்தச் சித்ரவதை.. ?
-- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))