அன்புக்காக
அவள் நேசித்தாள் !
நேசிக்கப்படவேண்டுமென விரும்பினாள்.
இன்னும் அதிகமாக
அவளின் வாட்டம்
உனக்குப் புரிகிறதா ?
எந்த நேசமும்
எத்தகைய நேசமும்
நிலையானதுதான் இல்லையோ ?
காலன் வந்து
வாரிக்கொண்டு
போகும்போது
காலடியில் மட்டும்
அமர்ந்து கதறி
காலம் சென்றபின்
மறந்துவிடும்
இயல்புடையதோ ?
இதை அவள்
உணராமல் இருக்கிறாளோ ?
அவள் மேல் அன்பு
திணிக்கப்பட வேண்டும்.
அவள் மட்டும்
பிறரை
நேசம் செய்ய முடியாது.
அவளின் அந்த
நேசத்திற்கு
பாசத்திற்கு
பதில் கிடைக்காவிட்டால்
அது குளத்தில் போட்ட
கல்போல்
செவிடன் காதில் ஊதிய
சங்குபோல்
ஆகிவிடும்.
அவளால் ஏற்றுக் கொள்ளமுடியாதபடி
தனித்துவமான அன்பு
மேலும் மேலும்
திணிக்கப்பட வேண்டும்.
அவளுக்கு
அத்தகைய அன்பு
கிடைக்குமா..?
-- 83 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))