மயக்கங்கள் தோலுரிந்தபோது :-
நான் கனவுகளிலே வாழ்பவள்.
இறந்த காலத்தில் வாழ்ந்துகொண்டும்,
எதிர்காலத்தைப் பற்றிய ஏகமாகக்
கனவுகண்டு கொண்டும் இருப்பவள்.
எனக்கு முன்னே செல்பவர்களை
முந்தவேண்டும் என்ற வெறி.
என்னைப் பின்பற்றுகின்றவர்களை
எனக்குப் பிடிக்காது.
பந்தயக் குதிரை
முன்னேறத்தான் துடிக்கும்.
பின்னேற வேண்டுமென நினைத்தால்
எப்படி முடியும் ?
நிகழ்கால எரிச்சல்களிலிருந்தும்
எதிர்காலப் பயத்திலிருந்தும்
தப்பித்து
இறந்தகாலச் சுகங்களில்
மூழ்கிக் கிடந்த என்னைத்
தட்டி எழுப்பாதே. !
உன்னிடம் என்ன தகுதி
இல்லையென்று எண்ணி
என்னிடம் எதையெதையோ
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாய் !
என்று கேட்டேனே அன்றொருநாள்.
அதற்கு நீ அளித்த பதில்.
’கூடவே மனசுன்னும் ஒண்ணு இருக்கே. ‘.
-- 82 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))