எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

மலரத் துடிக்கும் மொக்குகள்.



மலரத் துடிக்கும் மொக்குகள்.

ஏ அடிமைத் தளைகளே.
உங்களால் என்
கால்களைத்தான் கட்டிப்போட
முடியுமே தவிர
விடுபடத் துடிக்கும்
வீரியப் புறாக்களையல்ல.

ஏ உலகப் பள்ளமே!
உன்னுள் புதைந்து கிடப்பது
முட்காம்பு மட்டும்தான் என
நினைத்துவிடாதே
அதற்கும் மேல்
பூத்துச் சிரிப்பது
இளமை ரோஜா மொக்குகள்.
உன் வெம்மையால்
அவற்றை பொசுக்கலாம் எனக்
கனவு காணாதே.
ஏனெனில் அவை
இதழ் விரிப்பது
நினைவுச் சந்தோஷ வெளிகளில்.

ஏ வீரியப் புறாக்களே
உங்களின் செயல் வழிகளில்
வசந்தத்தை மட்டுமே
எதிர்பார்க்காதீர்கள்.
பாசம் எதிர்ப்புப் புயல்களும்
உங்களின் கடமை வழிகளில்
குறுக்கீடு செய்யும்போது
எதிர்நீச்சலிடக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஏ வெடிப்புப் பிரதேசமே !
வயோதிகத் தனத்தால் முணுமுணுக்காதே !
இந்தப் புதிய மொட்டுகளின்
முன்னேற்ற முயற்சிகளுக்கு
முதலுதவி செய். !

ஓ அடக்கப்பட்ட கரங்களே !
வாழ்வின் இருட்டு வெளிகளில்
உழன்றது போதும்.
உடையுங்கள் தளைகளை.
புறப்படுங்கள் விடுதலைப் புலிகளே !
உண்மையின் ஜீவாதார ஒளியை காண. 

-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...