என்னுடைய எழுத்துக்களில்
மெல்லிய நாதத் தந்திகளில்
அபஸ்வர ராகத்தையே ஏன்
மீட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறாய்.?
இதில் பூபாளமும் நன்றாக
இசைக்கப்படுகின்றது என்பது
உனக்குத் தெரியாதோ ?
உனக்குத் தெரிந்தது அவ்வளவுதானென்று
என் எழுத்து வீணைக்கு நன்றாகத் தெரியும்.
அதை மீட்டத் தெரிந்தவன்
புதுப்புதுராகங்களால்
அதை மீட்டிக் கொண்டிருக்கின்றான்.
~~~~~~~~~~~~~~
சந்தோஷ ஆத்துமங்கள்.
சந்திக்கும் நேரங்கள்
சந்திக்கும் நேரத்தில்
சமத்துவ சோதனைகள்
சோதனைகள் ஏற்படுத்தும் வேதனைகள்
வேதனைகளை வென்றுவிட்டால் சாதனைகள்.
~~~~~~~~~~~~~
இது ஒரு முரட்டுக் குதிரை
தேசிங்கு ராஜனுக்குக் கூடக்
கட்டுக்கடங்காதது
முடிந்தால் பிடித்துப் பாரேன்.
நீ சொல்லும் ஆறுதல் மொழிகள்
இதற்குத் தேவையற்றது.
சிராய்ப்புகள் வந்தாலும்
கீறல்கள் பட்டாலும்
சிலிர்த்து வரும் இதற்கு உன்
ஆறுதல் மொழிகள் எரித்தல் தரும் விஷயங்கள்.
எனக்கு ஆறுதல் கூறவந்தால்
நீதான் மனக்காயங்களால்
துன்புற வேண்டும்.
இதன் திமிரை ஒடுக்க
யாராலும் முடியாது
பிடிவாதம் கொண்டது
நினைத்ததைச் சாதிக்கும்.
முயன்று பாரேன் உன்னால் இதை
மாற்றமுடியுமாவென்று. ?
உன்னுடைய தோல்விக்கு
என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
என் வெற்றிக்கு வரும் தடைகளை உடைக்க
இந்த முரட்டுக் குதிரை தயாராகிவிட்டது
வா போட்டிக்கு. !
வெற்றி எனக்குத்தான்.
-82 ஆம் வருட டைரி.
வெற்றி எனக்குத்தான்.
-82 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
நன்றி சுரேஷ் சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))