எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 நவம்பர், 2015

அனாதைப் பறவையும், காய்ந்த ரோஜாவும்,



அது ஒரு அனாதைப் பறவை
அதன் ஓலங்கள்
மானுடங்களே !
உங்களால் உணரப்படாதவை
அதன் கதறல்கள்
உங்கள் செவிகளால் கேட்கப்படாதவை.
அதன் அழுகைகள்
உங்களால் இனம் தேடப்படாதவை.
ஏனெனில் அதுதான் அனாதைப் பறவையாயிற்றே.

        ~~~~~~~~~~~~~~~~

ஒவ்வொரு முறையும் ஒரு ரோஜாவாவது
எனக்குப் பலன் தராதா என்ற
அற்ப ஆசையால் ஏக்கத்தால்
பதியன்களைப் பயிரிட்டுப்
பலன்களுக்காகக் காத்திருந்தேன்.
பரிசாகக் கிடைத்ததென்னவோ
காய்ந்த சுள்ளிக்குச்சிகள்தான்

-- 82 ஆம் வுடைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...