எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 நவம்பர், 2015

கண்கள் சிந்திய முத்துக்கள்தான் நட்சத்திரங்களோ ?



கண்கள் சிந்திய முத்துக்கள்தான் நட்சத்திரங்களோ ?

பணக்காரர் இல்லத்தில்
பசும்பொன் பாத்திரத்தில்
தேன் கலந்த பாலுணவைத்
தெவிட்ட உண்டபின்
சிந்திய முத்துக்களோ ?

கண்ணீரென்பது
அன்னப்பால் கிடைக்காமல்
அல்லறும் ஏழைகள்
சிந்திய முத்துக்களோ. ?

கண்ணீரென்பது
தண்ணீரைக்கூடக் காணத
இளந்தளிர்கள் சிந்திய முத்துக்களோ?

கண்ணீரென்பது
உச்சிவெய்யிலில் உடல்கறுக்க
உழைக்கும் உழைப்பாளிகள்
உணவின்றி வாடும்போது
சிந்திய முத்துக்களோ ?

கண்ணீரென்பது
புனிதக் காதல் கூடப் பணத்தினால்
விலைமதிப்பற்றுப் போய்விட்டதால்
இருகண்கள் சிந்திய முத்துக்களோ ?

இத்தனை கண்களும்
இரகசியமாகத் தவறவிட்ட
சின்னச் சின்ன முத்துக்கள்தான்
நட்சத்திரங்களாகி விட்டதோ ?

-- 85 ஆம் வுடைரி. 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான சிந்தனை வரிகள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி தனபாலன் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...