புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 4 நவம்பர், 2015

பூக்களும் மான்களும் மூவரும்.இந்தக்குட்டிப்பூக்களைப் பார்க்கையில்
என் மனது உற்சாகத்தால் பிய்த்துக்கொண்டு பறக்கின்றது.
கால்கள் பாதங்கள் குதிகால் பிடரிபட ஓட்டங்கள்.
துறுதுறுப்புகள், தேன் துளிப்புன்னகைகள்
அரசியல்வாத சபதங்கள்,
முடிவில் தோல்வி கண்டபோது
சிவந்து செம்மலாகிப்போன பூக்கள்.

   ~~~~~~~~~~~~~~~

சில மான்களின் துள்ளல்கள் :-

சில நேரங்களில் எனக்கு
உங்களுக்கும் மங்கையர்க்கும்
அடையாளம் தெரியாமல்
போனதன் காரணம்
அவர்கள் துள்ளுநடையை நீங்களும்
உங்களின் தோலாடையை
அவர்களும் கடன் வாங்கிக் கொண்டதனால்தானோ ?

       ~~~~~~~~~~~~~~

அதோ மூவர் :-

போகின்றார்கள் விடியலை விரும்பி
மங்கலான நிலவொளி
தென்னங்கீற்றுப் பாதைகள்
மூவர்
நடந்தார்கள்.
கைகளோடு கைகளை
இறுகப் பிணைத்துக் கொண்டு
விடியலை விரும்பிக் கொண்டு
உலகை ரசித்துக் கொண்டு
உள்ளத்தை உணர்ந்துகொண்டு. 

-- 80 ஆம் வுடைரி. :) 

3 கருத்துகள்:

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...