எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 நவம்பர், 2015

இருட்டு.



இருட்டு :-

எதிரே ஒரே இருட்டு.
எதிர்காலமும் அப்படியோ ?
மனதில் பூக்கும்
சின்னச் சின்னச்
சந்தோஷப்பூக்களை அழிப்பதில்
இந்த அக்கினிதேவனுக்குத்தான்
என்ன ஆனந்தம். ?
அவள் கண்ட ரோஜாவில்
முள் மட்டும் அவள் பக்கம்
அந்த அழகு ரோஜாவை
அவள் தன் மனதில்
இருத்திக்கொள்ளத்தானே விரும்பினாள்
அதனை இதயக் கோயிலில் வைத்து
ஆராதனை செய்யத்தானே
ஆசைப்பட்டாள்.
அந்த அழகு ரோஜாவுக்கு
அவளிடம் அப்படி என்ன கோபம். ?
தன் பணம், அழகு, மென்மை,
இதம், அன்பு, குணம்,
ஆசை அனைத்தையும்
காண்பிக்காமல் தன்னிடத்தில் உள்ள
சுருக்கென்று தைக்கின்றார்போல்
குத்துகின்ற முள்ளை மட்டும்,
முள்ளைமட்டுமே காண்பிக்கின்றது.
பரவாயில்லை
அந்த ரோஜாவுக்கு என்னுடைய
அன்புமனம் புரியாவிட்டால்
பரவாயில்லை.
அவள் அந்த அழகு ரோஜாவின்
மனத்தை, மணத்தை, கற்பனையிலேயே கண்டு
களித்து உறவாடி மகிழ்ந்து விடுவாள்
அந்த நினைவு ஒன்றே
அவளுக்குப் போதும்.
காலம் முழுமையும்.

-- 80 aam varuda diary 

3 கருத்துகள்:

koilpillai சொன்னது…

நல்ல கற்பனை- கவிதை.

வாழ்த்துக்கள்.

கோ

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோயில் பிள்ளை சகோ

Thenammai Lakshmanan சொன்னது…


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...