நெஞ்சமெல்லாம்
நீயே ஆக்கிரமித்துக் கொண்டதால்
என்னைப் பற்றிச் சிந்திக்க
நேரமே இல்லாமற்போய்விட்டது.
என் உடலில் எலும்புகளின்
இணைப்புகள் அறுந்து துண்டாகி
இரத்தம் கொட்டியபோதுகூட
நான் துன்பப்படவில்லை. சலனப்படவில்லை.
ஏனெனில்
நம் மன இணைப்புப் பலமாக
உறுதியாக இருக்கிறதல்லவா?
உன்னைப்பற்றின நினைப்பில் எனக்கு
என் வலியே ஞாபகம் இல்லாமல்
மறந்துபோய் நினைக்க அவகாசமே
கிடைக்காமற் போய்விட்டது.
ஆனாலும் ஊனமனசு மட்டும்
ஊமையாய் பிடிவாதமாய்
மறுகிப்போய் அழுகின்றது. புலம்புகின்றது.
ஏனெனில் உன் ஆடை ஓரத்தை
ரோஜாமுனை ஒன்று குத்திவிட்டதேமே.
தப்பித்தவறி அது உன்
பாதத்தில் பட்டிருந்தால்
உன் பட்டுப் பாதங்கள்
நொந்திருக்குமே என்ற கவலையால்
என்னால் அமைதியாகத் தூங்க முடியவில்லை.
விழிவாசலில் எந்நேரமும்
உன்னைப் பற்றிய சிந்தனையே
தோரணமாய்த் தொங்கிக் கொண்டிருப்பதால்
இமைக்கதவுகள் இரண்டுங்கெட்டானாய்
விழித்துத் தவிக்கின்றன.
உன்னை மறகக் வேண்டுமென்ற
சிந்தனையையே மறந்து
உன்னை நினைக்கக் கூடாது என்ற
நினைப்பையே நினைத்து நினைத்துத்
தன்னையுமறியாத தீவிரவாதியாகிப் போகின்றேன்
உனக்குக் கஷ்டம் வந்தால்
உன் சுற்றத்தில் உடலில் உள்ள
இரத்தம் மட்டுமே துடிக்கும்
ஆனால் உனக்காக என்னிடத்தில்
என்னுள்ளே ஊடுருவி நிற்கும்
ஆன்மா கதறி ஓலமிடுகின்றதே.. துடிக்கின்றதே.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))