எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மண்ணில் தெரியும் வானம்



மண்ணில் தெரியும் வானம் :-

வானத்துப் பஞ்சுப் பொதிகளுக்கீடாக
மண்ணும் நேசிக்கிறது குப்பைக் குவியல்களை
மண்ணில் தெரியும் வானம்
மனதில் தணியாத தாகம்.

சந்திரனைச் சேரும் நேரத்துக்காக
யுகக் கணக்காய்த் தவமிருக்கும்
சின்ன நட்சத்திரங்கள்
இப்பூவுலகிலும் உண்டு.

வானுலகத் தேவர்க்கீடாக
மாப்பிள்ளைத் தேவர்கள்
மண்ணின் மைந்தர்கள் உண்டு.

பிரகஸ்பதியின் மனைவி
சந்திரனுடன் கூடி வாழ்ந்ததைப் போலே
கணவனை விட்டுக் கண்டவனுடன் வாழும்
கன்னியரும் இப்பூவுலகிலும் உண்டு.

இந்திர லோகத்தின்
இரம்பை ஊர்வசி ஆட்டத்தைவிட
இந்தப் பூலோகத்தின்
ஜெயமாலினி சிலுக்கு ஆட்டம்
ஈரேழு லோகத்தையும் இழுத்துவிடும்

வரன் வதுவை மனம் செய்யும்
காந்தருவத் திருமணங்கள்
கற்பின் கணலி கண்ணகி பிறந்த
கன்னித்தமிழ் நாட்டிலுமுண்டு.

வானத்துப் பஞ்சுப்பொதிக்கீடாக
மண்ணும் சுமக்கிறது குப்பைக் குவியல்களை.
மண்ணில் தெரியும் வானம்
மனதில் தணியாத தாகம்.

அந்த வானுல மனிதனும் குடித்தான்.
இன்று ”குடிப்பது உடல் நலத்திற்குக்
கேடு செய்யும்” என்று எழுதி ஒட்டிய
சிட்டைகள் கொண்ட புட்டிகளை
வட்டியில் வாங்கி வீட்டைப் பட்டினி போடும்
வெட்டி மனிதனும் இருக்கத்தான் செய்கிறான்.

கிரேதாயுகத்தில்
துரியோதனன் முதலியோரின்
வஞ்சகச் செயல்களால்
எல்லையற்ற துன்பங்களை
அனுபவித்தனர் பாண்டவர்.
அந்தத் துரியோதனை அழிக்க
ஓரு அர்ச்சுனன் பிறப்பெடுத்தான்.

இந்தக் கலியுகத்தில் இருக்கும்
ஆயிரக்கணக்கான துரியோதனர்களை அழிக்க
எத்தனை அர்ச்சுனர்கள் பிறக்க வேண்டுமோ ?
வானத்துப் பஞ்சுப் பொதிகளுக்கீடாக
மன்னும் சுமக்கிறது குப்பைக் குவியல்களை.
மண்ணில் தெரியும் வானம்
மனதில் தணியாத தாகம்.

இது தவிர
வானுலகத்தில் சொர்க்க லோகமும் உண்டு.
அது மண்ணில் கிடையா.

விசுவாமித்திரத் தவத்தைக்
கலைக்கத்தேவை ஒரு மேனகை போல்
மணிகண்டன் பிறக்கத்தேவை
ஒரு மோஹினி ஆட்டம் போல்
மண்ணில் வானம் தெரிவதற்குத் தேவை
உழைப்பு உழைப்பு உழைப்புத்தான். 

உழைப்பிலே ஒரு உற்சாகம்
சிந்தனையில் ஒரு தெளிவு
நடையிலே ஒரு துள்ளல்
உலகம் முழுவது ஒற்றுமையும்
சமாதானமும் நிலைத்து இருந்தால்
மண்ணில் வானம் தெரிய முடியும்.

-- 82 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// எத்தனை அர்ச்சுனர்கள் பிறக்க வேண்டுமோ ? //

40 : 60...?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உழைப்பிலே ஒரு உற்சாகம்
சிந்தனையில் ஒரு தெளிவு
நடையிலே ஒரு துள்ளல்
உலகம் முழுவது ஒற்றுமையும்
சமாதானமும் நிலைத்து இருந்தால்
மண்ணில் வானம் தெரிய முடியும்.// சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…

ரசித்தேன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி சுரேஷ் சகோ

நன்றி கில்லர்ஜி சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...