மண்
கலகலத்துக் கிடக்கும்
ஈரப்பசையற்ற
காற்று
கதவடிக்கும்
பொம்மை
குடுமியில்
சுருக்கு
மாட்டிக்
கதிகலங்கித்
தொங்கும்
தொப்பை
சட்டை விரித்துப்
பித்தான்
அறுக்கும்
மூலையோரச்
சிலந்திக் கூடுகளில்
கொசுக்கள்
குந்திச் செத்துப் போகும்
வெற்றுத்
தலையணைப் பஞ்சுகளுக்குள்
மூட்டைப்பூச்சிகள்
அவதிப்படும்.
கரப்புகள்
வெளிச்சம்
பார்த்து
மீசை
ஆட்டிக் கோபப்படும்.
மேகம்
வேகமாய்
இதழசைத்து
முணுமுணுக்கும்
குளிர்
கொசுவாட்டம் முகத்திலப்பும்
ரோட்டோரத்
தேங்கல்கள்
தலைப்பிரட்டை
பெற்றுச்
சத்தமிட்டு
அலையும்
குட்டிக்
குட்டி வானவில்
ரோட்டில்
தலைக்குக் குளிக்கும்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
ரசித்தேன்...
நன்றி டிடி சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))