புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 20 மே, 2015

ஓ தேர்தல் :-ஓ தேர்தல் :-

இந்தியா இன்று
புனர்ஜென்மமெடுத்ததோ
அட
எத்துணை புத்தன்கள்
கருணை காந்திகள்
பேகன்கள்
தேடிக்குடம் கொடுத்துப்போகும்
பாரிகள்
ஓரிகள்
காரிகள்
இதென்ன
இந்தியவுக்குப் ப்ரஸவமா
எத்தனை
அலங்கார வாழ்த்து உரைகள்
இவள்மேல்
இந்தியா
தன்னையே
இருகூறாகப்
பிரித்துக் கொள்கிறதோ
சிந்தனையும்
மனமுமாய்ச் சீறி
தன் ஆன்மா
குத்திக்கொள்கின்றதே
இங்கே
இந்தக் கழைக்கூத்தாடிகள்
எத்தகைய
இந்திரஜாலத்தைக்
காட்டுகின்றார்கள்
எத்தனை
தழைதின்னும் மந்தைகள்
அகப்படுமெனக் கணக்குப் பண்ணி.
இங்கே
பித்தலாட்டத்துக்கும்
கள்ளத்தனத்துக்கும்
சுயம்வரம்.
பெற்றோர்
அரசியல்வாதிகள்
ஓ !
இன்னும்
இரண்டு நாளில்
வாக்கெடுப்பு.

-- 85 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடர்கதை....?

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...