எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 மே, 2015

கடிதம்.



ஏ கடிதமே.!
உன்னை எதிர்பார்க்கிறேன்.
காணவில்லையே இன்னும்.
ஒழுங்காகப் புறப்பட்டாயா.?
விலாசம் மாறிப்போய்விட்டாயா.?
நான் அனுப்பிய இடத்திற்குப்
போய்ச்சேர்ந்தாயா இல்லையா..?
திரும்பிவர ஏனிப்படித்
தாமதம் செய்கிறாய்.?
நீயும் தங்கம் வெள்ளிபோல்
விலையுயர்ந்துவிட்டாயா.?
பெற்றுக் கொண்டவர்கள் ஏன்
திருப்பி அனுப்ப மறுக்கிறார்கள்.?
கண்டிக்கும் வரை காத்திராமல்
கிளம்பி வா சீக்கிரம்.
வந்தவுடன் உன்னை நான் கிழிப்பேன்.
பயப்படாதே! பின்பு படிப்பேன்.


-- 1982 ஆம் வருட டைரி :) :) :)  வீட்டிலிருந்து கடிதத்தை எதிர்பார்த்து ஹாஸ்டலில் காத்திருந்த ஒரு பொழுதில் எழுதியது :)

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Cello Tape தான் கையில் இருக்கும் போது கவலை எதற்கு...? ஹிஹி...

Kasthuri Rengan சொன்னது…

ஏன்
தமிழ்மண வாக்குப்பட்டை வேலை செய்யவில்லை..
கவிதை அருமை தொடருங்கள்

KILLERGEE Devakottai சொன்னது…


ஸூப்பர் நினைவலைகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆமா ஒட்டிவிடலாம் டிடி சகோ :)

நன்றி மது. தமிழ்மணம் பத்தி ஏன்னு தெரியலையே..

நன்றி கில்லர்ஜி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...