புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 11 மே, 2015

தானியங்கிகள்:-தானியங்கிகள்:-

வெற்றுச் சாக்குகளுடன் வாருங்கள்
வருங்காலத்திற்காய்
நவதான்யங்கள் சேர்த்து வைப்போம்.

சூரிய இரைக்காய்க்
காத்திருக்கும் தாவரங்கள் நாம்.
நம் வாரிசுகளுக்காய்ப்
பச்சையம் கருத்தரிப்போம்.

மனித மனசுகளை
நம் கவிதை விழுதுகளின்கீழ்
ஆக்டோபஸ்களாய்ப் பிடித்து வைப்போம்

நம்முடைய நாட்டில்
எத்தனை நிலங்கள் தரிசுகளாய்
நம் இலக்கிய ஏர்களால் உழப்படாமல்
பனைகளையாவது பயிரிட்டு வைப்போம்
அவை நம் பரம்பரையின்
பசிக்கிறக்கம் விலக்கட்டும்.
தாகவிடாய் தீர்க்கட்டும்.

--- 83 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...