புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 21 மே, 2015

மருதாணிகள்என்ன அதிசயம்
இந்த வயல்கள்
இட்டுக்கொண்ட
பச்சை மருதாணிகள்
மஞ்சளாய்
உமிழ்ந்திருக்கிறதே

அந்த ஆகாயம்
இட்டுக்கொண்ட
வண்ண மருதாணி
வானவில்லோ

அந்த அருவி
இட்டுக் கொண்ட
மருதாணிகள்தான்
பூக்குவியல்களோ

அந்த கங்கை
வைத்துக்கொண்ட
மருதாணிகள்தான்
இந்தப்பிணங்களோ

தாய் பெற்றுக்கொண்ட
குழந்தைகள்
மருதாணிச் சிகப்புகள்
மனமார இதழ்
பிரித்து ரகசியமாய்ச்
சிரிக்கும் சிரிப்புகள்
இந்த மருதாணிச் சிகப்புகள்

வெந்நீரால் துடைக்கப்பட்டுத்
தூய்மையாய் இருக்கும்
பளிங்குகள்
மருதாணிச் சிகப்புகள்

விபத்தில் தெறிக்கும்
ரத்தத் தெறிப்புகள்
மருதாணிச் சிகப்புகள்

சோடிய வேப்பர் லாம்பின்
கலங்கல்கள்
மருதாணிச் சிகப்புகள்

செம்பருத்திப் பூக்கள்
செடி இட்டுக் கொள்ளும்
மருதாணிகளோ

கப்பல்கள் கடல்
இட்டுக்கொண்ட
மருதாணிகளோ

கனவுகள்
நினைவுகள்
வைத்துக் கொண்ட
மருதாணிகளோ.

கோலங்கள் வாசல்கள்
இட்டுக் கொண்ட மருதாணிகளோ

உடைகள்
உடல்கள் போட்டுக் கொண்ட
மருதாணிகளோ.

வார்த்தைகள்
வாய்கள் இட்டுக்கொண்ட
மருதாணிகளோ

சுண்ணாம்பு
சுவர் வைத்துக்கொண்ட
மருதாணியோ

தீபம் விளக்கின் திரிவிரல்
அப்பிக் கொண்ட
மருதாணியோ

எழுத்துக்கள்
பேப்பர்கள் இட்டுக்கொண்ட
மருதாணியோ

படங்கள்
பார்வைகள் பூசிக் கொள்ளும்
மருதாணியோ

சந்தங்கள்
சதங்கைகளில்
உறைந்துபோன மருதாணியோ

கண்கள் இட்டுக்கொண்ட
மருதாணி கண்ணாடியோ

குங்குமம் நெற்றி
இட்டுக்க்கொண்ட மருதாணியோ

பாதைகள்
பாவிக்கொண்ட மருதாணிகள்
டயர்த்தடங்களோ

சிந்தனை இட்டுக்கொண்ட
மருதாணிகள் கவிதைகளோ.

-- 85 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு பதிவும் மருதாணி தான் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் டிடி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...