புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

சனி, 23 மே, 2015

நவரத்னமும் வெள்ளியும்.வைரம் பாய்ந்த
தேகம் உனக்கு.

புஷ்பராகக் கண்கள்.
உள்ளே நீரோட்டமாய்க் கருணை.

முத்துப் பற்கள்
பவள உதடுகள்
வைடூர்யப் புன்னகை.

கோபத்தில் உன் முகம்
மாணிக்கச் சிகப்பு.

காதலில் உன் உணர்வு
மரகதப் பசுமைபோல் மென்மை.

உன்னை என்னால்
உணர்ந்து பார்க்க முடியாத நேரங்களில்
குழப்ப நீலம்.

மனதை மயக்கும் நேரங்களில்
இனிய மஞ்சள்.

தங்க மனசு.
இந்த நவரத்ன உங்களில்
இப்போது வெள்ளியும் விளைகிறதே..

நீங்கள் எனக்கு
ஒரு அற்புதமான ஆபரணம். 


--  2011 டைரி :)

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...! அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

டிடி சகோ நன்றி :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...