காலக்
கண்ணாடி
ரசமிழந்து
போகும்
நிகழ்ந்ததும்
நிகழ்தலும் அறியாமல்
பூவுக்குள்
வேர்பதிக்கும்
பூஞ்சைக்
காளான்கள்
செல்களின்
இறத்தலுக்கு
வித்திடும்
சுருக்கங்கள்
கருக்கலைந்த
உடனேயே
கண்ணாடியும்
கைத்தடியும்
மனச்
சலங்கை புதிய
கவிதை
அபிநயங்கள் பிடிக்கத்தெரியாமல்
களைத்துக்
கிடக்கும்.
பூவுக்கும்
நாருக்கும்
போட்டியாகும்.
வாழ்க்கை
குப்பையாய்
சேர்ந்து
போகும்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:
"பூவுக்கும் நாருக்கும்
போட்டியாகும்.
வாழ்க்கை குப்பையாய்
சேர்ந்து போகும்"
அற்புதம்...
அருமை... அருமை...
முதல் முறை கருத்திட்டமைக்கு நன்றி வெட்டிப்பேச்சு
நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))