வேரைத்
தாங்கும் விழுதுகள்.
பேனாக்கள்
மைச்சோறு ஊட்ட
இவர்கள்
நெஞ்சக் காகிதத்தை
நம்
கவிதை நிரப்பட்டும்.
வயலெங்கும்
பயிர்கள்
பயிரிடப்பட்டவையோ
வேற்றுமைவாதமென்னும்
பூஞ்சைக்காளான்கள்
களையென்று
எதைக்களைவது.
மண்ணில்
வனையப்பட்ட பானை
நீரைக்
குளிவித்துத் தாக நாவை
உயிர்ப்பிக்கும்
உயர்விக்கும்.
ஒவ்வொரு
எழுத்தாளனும்
அனுபவநீரை
உள்வாங்கி
தாகம்பட்ட
மனதிற்கு
எழுத்து
நீரைப் புகட்டும்
வேனிற்காலப்
பானை போல.
நேற்றைய
நிகழ்வுகள்
இன்றைய
சருகுகள்
இன்றைய
விழுதுகள்
நாளைய
அடிமரங்கள்.
வேரைத்
தாங்கும் விழுதுகள்
விழுதுகள்
மேலோ பழுதுகள்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
2 கருத்துகள்:
நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))