புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 15 மே, 2015

மெஹந்தியும் ஹிந்தியும்..வேனிலில் ஐந்திற்கும்
குளிரில் பத்திற்கும்
புலரும் பொழுது.

வாசல் ஜன்னலில்
எங்கு நோக்கினும்
இந்திய ஒருமைப்பாடு.
தேசியத்தின் பல முகங்கள்.

ஹிந்தியில் கத்தும்
குருவி காக்கைகள்.

தெரிந்த காய்கறிகள்கூட
தெரியாத பெயர்களில்.

காய்கறிச் சந்தையில்
கேட்ட தமிழ் இனிய சங்கீதமாய்.

இரயிலின் கூவல்கூட
சென்னைக்குச் செல்லலாம் வா என்பதாய்.

உடம்பே எரியும் வெய்யில்காலம்.
மூன்று உல்லனிலும் குளிரும் குளிர்காலம்.

இருந்தாலும் குறைவில்லா தண்ணீரிலும்
கள்ளிச்சொட்டுப் பாலிலும்
ஜாங்கிரியிலும் சப்பாத்தியிலும்
சுரிதாரிலும் குர்த்தாவிலும்
டர்பனிலும் சம்கித் துணியிலும்
மெஹந்தியிலும் ஹிந்தியிலும் ஒரு
இனம்புரியாத கவர்ச்சி இருக்கவே செய்கிறது.


-- 95 ஆம் வருட டைரி :)

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...