வெட்டிக்
கம்பம்
வேலையற்றுக்
கிடக்கிறது
உள்ளே
வேதிவினை
ஒன்றும்
நிகழவில்லை
அதனால்
துறவறமாய்
நிற்கவில்லை
அது
பிறவியிலேயே
யோசிக்கத்
தெரியாத
வெற்றுக்
கம்பம்தான்
வேதனைப்
படக்கூடத்
தெரியாத
ஜடக் கம்பம்
கனவுகளுக்குப்
பஞ்சம்
கண்ட
மண்
சாமியது
கற்பனை
செய்யத் தெரியாமல்
மண்ணில்
மண்ணில்
மண்ணிலேயே
வேரோடி
நரம்பு
ஊசியாய்
நார்
கிழிக்கும் கம்பம்.
பக்கத்து
மரத்தின் விழுதின்
வேரைத்
தளைப்படுத்தி
காரணமில்லாமல்
வஞ்சம்
தீர்க்கும்
ஏவாளைக்
கெடுத்த பாம்பு
அங்கலைந்து
இங்கலைந்து
மெல்ல
ஆளையே அடித்து
விழுங்கும்
சைத்தான்
வெட்டிக்
கம்பம்
வினைமுடித்து
வேலையற்றுக்
கிடக்கிறது.
-- 82 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
// ஏவாளைக் கெடுத்த பாம்பு //
அருமை....
நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))