எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 மே, 2015

வெட்டிக் கம்பம்



வெட்டிக் கம்பம்
வேலையற்றுக் கிடக்கிறது
உள்ளே வேதிவினை
ஒன்றும் நிகழவில்லை
அதனால்
துறவறமாய் நிற்கவில்லை
அது
பிறவியிலேயே
யோசிக்கத் தெரியாத
வெற்றுக் கம்பம்தான்
வேதனைப் படக்கூடத்
தெரியாத ஜடக் கம்பம்
கனவுகளுக்குப்
பஞ்சம் கண்ட
மண் சாமியது
கற்பனை செய்யத் தெரியாமல்
மண்ணில் மண்ணில்
மண்ணிலேயே வேரோடி
நரம்பு ஊசியாய்
நார் கிழிக்கும் கம்பம்.
பக்கத்து மரத்தின் விழுதின்
வேரைத் தளைப்படுத்தி
காரணமில்லாமல்
வஞ்சம் தீர்க்கும்
ஏவாளைக் கெடுத்த பாம்பு
அங்கலைந்து
இங்கலைந்து
மெல்ல ஆளையே அடித்து
விழுங்கும் சைத்தான்
வெட்டிக் கம்பம்
வினைமுடித்து
வேலையற்றுக் கிடக்கிறது.

-- 82 ஆம் வருட டைரி

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// ஏவாளைக் கெடுத்த பாம்பு //

அருமை....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...