ஒரு
கொடி துடித்துக்
கொண்டிருக்கிறது
கத்திரிக்கோல்
பார்வைகளுக்கு
அஞ்சி
இங்கே
பாரியும் இல்லை
அகிலனின்
பாலனும் இல்லை
கொழுகொம்புதான்
வேண்டாம்
சின்னச்
செடித்தண்டுகூடப்
பக்கமில்லை.
கன்னிக்
கொடி அது
ஆனாலும்
கூந்தலழிக்க
அது
மணிமேகலை அல்லவே
மெல்ல
நெருங்கும்
கருக்கரிவாள்
காலனுக்குப்
பயந்து,
ப்ளஸ்டூ பையனாட்டம்
க்ராப்
வெட்ட அஞ்சி ஒளிகிறது.
ஒரு
கொடி துடிக்கிறது
மணிபல்லவப்பூதம்
கூட இல்லை.
எங்கே
தொலைந்தது
அந்த
மணிபல்லவப் பூதம்
கத்திரிக்கோல்
பார்வைகளுக்கு
அஞ்சி
ஒரு
கொடி கண்ணிமைக்காமல் கிடக்கிறது.
-- 82 ஆம் வருட டைரி.
-- 82 ஆம் வருட டைரி.
2 கருத்துகள்:
/// அது மணிமேகலை அல்லவே ///
ஆகா...!
ஆம் டிடி சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))