வெய்யில்:-
விடியலில்
ராஜகுமாரனின் அணைப்பாய்
நண்பகலில்
ராட்சசப் பிடியாய்
மாலையில்
வானப் ப்ரஸ்த விலகலாய்..
மதியத்தில் பருவப்
பெண்ணாய்
பொன்னிறக் கதகதத்து
வீர்யக்
கதிர்பாய்ச்சி
மாலையில் பருவம்
தப்பும் பெண்ணாய்
குளிருக்குள்
ஒடுங்கி
இரவுக்குள் துயில்கிறது.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))