எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 ஜூலை, 2016

நன்றி சமர்ப்பணம் விமர்சகர்களுக்கு,



நன்றி சமர்ப்பணம் விமர்சகர்களுக்கு.:-

எனக்கென்ன தெரியும்
கவிதையைப் பற்றி ?
அதைக் கிலோ கிலோவாக
வாங்கிக் கொண்டு போகும்
வியாபாரியிடம் அல்லவா
கேட்க வேண்டும்.
நானொரு முட்டாள்
எனக்கென்ன தெரியும்
கவிதையைப் பற்றி ?
அதைப்படிப்பவனுக்கல்லவோ
புரிய வேண்டும்.
எனக்கென்ன தெரியும்
எதுகையும் மோனையும் ?
பிதற்றி அழுது
பிலாக்கணம் பாடத்தானே தெரியும்.
எனக்கென்ன தெரியும்
கவிதையைப் பற்றி ?
என் டைரியைக் கண்டாலே
காததூரம் ஓட்டமெடுக்கும்
என் நண்பர்களையல்லவா
கேட்க வேண்டும்.
எனக்கென்ன தெரியும்
நட்புணர்ச்சி பற்றி ?
அனைவராலும் ஜடமாய்
ஆக்கப்பட்டதுதானே மிச்சம்.
எனக்கென்ன தெரியும்
கவிதையைப் பற்றி. !

-- 85 ஆம் வுடைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...