தேடல் :-
மேகங்கள்
ஆகாய வீணையில்
தந்தி தேடிச்
சலிக்கும் விரல்கள்.
மரங்கள்
மண் வீணையில்
சுரக்கட்டை தேடி
வேர் விரல் சலித்துப் படுக்கும்.
ஆறுகள் கடலை மீட்டினாலும்
அவற்றில் பிறப்பதென்னவோ
அபஸ்வர அலைகள்தான்
துடைப்பங்கள் கூட
குப்பைச் சரங்களைச் சேர்த்து
மண் வீணையில்
சுத்தச் சந்தங்களை
உருவாக்க முயலும்.
பூக்கள் கூட
எல்லாச் செடிகளிலும்
வாடிய நாதமாய்ச்
சுருங்கிச் சிதையும்.
மனசோ
யதார்த்த வீணையில்
பற்றுக்கோடுத் தந்தி தடவி
சந்தோஷ சந்தம்
உருவாக்க முயன்று பார்க்கும்.
-- 82 ஆம் வருட டைரி.
-- 82 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))