ப்ரியம் என்பது சொல்லல்ல
அது தன்னுள் நடக்கும் நிகழ்வினை
என் மலையேறும் தவத்தில்
உந்துசக்தியாய் வழியாட்டியாய் நீ
உயர்வுக்கு வித்திட்டவளே நன்றி.
அம்மா அப்பா என்பதே சிநேகம்
தோழமையின் முடிவே ஆழ்ந்த ப்ரியம்.
அதனுள் சகலமும் அடக்கம்
அடங்கிப்போ அதனால் வெட்கமில்லை
பாறைகளுக்குள்ளும் பூ மரம் தழைக்கும்
நீயும் அதுபோல் சிநேகம் வளர்.
நீல ஆகாயத்துள் உலாப் போகும்
வானம்பாடிகளுக்கு
மேகக் குப்பைகளா வேலிகட்டுவது ?
கம்பீரம் கொள் !
அன்பை அணிந்துகொள் !
உபயோகியாய் வாழ் . !
மனசு நிறையப் ப்ரியமும் அன்புமாய்,
அக்கா தேன். ( 30/5/85 ).
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))