நினைவுகளின் மிச்சங்களிலிலிருந்தும்
வாசனைகள் தோன்றுகின்றன.
ஒருமுறை டால்கம் பவுடராக
ஒருமுறை குளியல் சோப்பாக
ஒருமுறை வாசனைப் பாக்காக
ஒருமுறை டர்க்கி டவலாக
காலியான பீர் கோப்பைகளும்
கடலை சிதறிக்கிடந்த தட்டும்
குறுக்கு மறுக்காகக் கிடக்கும் ரிமோட்டும்
கொழுக்கட்டையான தலையணையும்
சரிந்துகிடக்கும் குஷன் கவர்களும் கூட
வாசனைகளால் நிரம்பி இருக்கின்றன.
ஒரு முறை பேய் பற்றிய கதை ஒன்று கூட
உன்னை ஞாபகப்படுத்தியது.
அதே பக்கத்தில் கலங்கலாக நான்
உன் தோளில் தொற்றியிருப்பதான
ஒரு சித்திரமும் கூட
உன் வாசம் சுமந்த வேதாளமாய்
உன் முத்தத் தொற்றுக்கள் பற்றுக்கோடாய்.
வாசனைகள் தோன்றுகின்றன.
ஒருமுறை டால்கம் பவுடராக
ஒருமுறை குளியல் சோப்பாக
ஒருமுறை வாசனைப் பாக்காக
ஒருமுறை டர்க்கி டவலாக
காலியான பீர் கோப்பைகளும்
கடலை சிதறிக்கிடந்த தட்டும்
குறுக்கு மறுக்காகக் கிடக்கும் ரிமோட்டும்
கொழுக்கட்டையான தலையணையும்
சரிந்துகிடக்கும் குஷன் கவர்களும் கூட
வாசனைகளால் நிரம்பி இருக்கின்றன.
ஒரு முறை பேய் பற்றிய கதை ஒன்று கூட
உன்னை ஞாபகப்படுத்தியது.
அதே பக்கத்தில் கலங்கலாக நான்
உன் தோளில் தொற்றியிருப்பதான
ஒரு சித்திரமும் கூட
உன் வாசம் சுமந்த வேதாளமாய்
உன் முத்தத் தொற்றுக்கள் பற்றுக்கோடாய்.
4 கருத்துகள்:
"கொழுக்கட்டையான தலையணை"....நல்லாயிருக்கே....
அருமை! வாழ்வே நினைவுகளின் எச்சம்தானே..
அஹா ! நன்றிடா ராதா :)
நன்றி & ஆம் பானுமதி வெங்கடேஸ்வரன் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))