நிலவுக்கு இட்ட மச்சமாய்
மூக்குத்தியாய், நெற்றித் திலகமாய்
மும்முனைச் ஜ்வலிப்புக்கள். ( நட்சத்திரங்கள் )
உச்சாணிக் கொம்பில்
வால் சிம்மாசனத்தில் அமர்ந்து
குசலம் விசாரிக்கும் அணிலின் வாலுத்தனம்
கிழவன் பல்லிளிப்பாய் நிலாவில்
உண்ட தட்டில் முத்துச் சிதறலாய்ச்
சோற்று எச்சங்கள் எச்சல்கள்.
சில்வண்டுச் சிணுங்கலாய் சுற்றிலும்
சித்தி சித்தி ரீங்கரிப்புக்கள்
காதெல்லாம் சங்கீதம்.
காதெல்லாம் சங்கீதம்.
திருவிழாவில் வாங்கிய
ஆப்பிள் பொம்மையை நினைத்து நினைத்து
இரகசியமாய் மகிழ்ந்து போகும் குட்டி பொம்மை.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))