ஸ்வயங்கள்:-
உரிமைகளின் சமாதியில்
ஸ்வயங்கள் மெல்ல மெல்ல
அடிபட்டுப் போகும்..
எதிர்பார்ப்பவர்களை
ஏமாற்றமுடியாத காரணத்தால்
தன்னையே ஏமாற்றிக் கொள்ளும்
மாற்றிக் கொள்ளும்.
அறிவுபூர்வத் திட்டங்கள்
மட்டம்தட்டப்படுகையில்
நொந்து போகும்.
பட்ட காலிலே படுமென்பதுபோல்
பொறாமை உள்ளங்கள் எதிர்த்து
மனமெரியும்போது
ஸ்வயம் புண்ணாகிச் சீழ்ப்பிடிக்கும்.
செல்லரித்த காசாய்
ஏமாற்றப்பட்ட நினைவில்
அழுகிப் போகும்.
உணர்வுக் குவியல்களின் தாக்கத்தால்
குறைந்து குறைந்து
ஒன்றுமில்லாமலே இற்றுப் போய்விடும்.
சமாதியில் இட்ட உருவின்
எலும்புத்துண்டுகூட மிஞ்சாது.
உணர்வு மறந்த மரக்கட்டையாய்
மனசோரத்து ஒரு மூலையிலமர்ந்து
தன் இழப்பை எண்ணி ஏங்கி
அவமானத்தால் சுருண்டு
விம்மிக் கொண்டிருக்கும்.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))