மானுடத்
தேடல்கள்:-
மானுடமொட்டுகள்
எதற்கு
மலர்கின்றன
தேடல்களின்
முடிவை நோக்கிப்
பயணப்பட்டுச்
சருகாவதற்கா
மனசு
இழை இழையாய்ப்
பின்னிக்கொண்டு
பிராண்டியது.
அடம்பிடித்துச்
சிக்கானது
ஆற்றல்
மிக்க மானுடம்
விண்ணுக்குள்
இறங்கி ஆராய்ந்தது
மண்ணைத்
துளையிட்டுத் துருவிப் போட்டது.
அணுவை
ஆயிரமாய்ப் பிளந்து
கெக்கலித்தது
இருந்தும்
இது
சாபவிமோசமன்
பெற்றும் பெறாத
அகலிகை
மனம் போல. தவித்தது
ஏக்கத்தின்
சவலைக் குழந்தையாய்
அப்பாவி
மானுடம்
சோகம்
அதன் கண்களில் மனசில்
ஆராய்ச்சிக்
கூடத்தின் அமிலமாட்டம்
புகுந்து
அரித்தது அரித்தது.
மானுடத்தின்
மலர்தல்கள்
பயணப்பட்டுச்
சருகாவதற்கா
பிரார்த்திக்கின்றது
ஒரு மனது
பரிபூரண
நிம்மதி பெறவேண்டி
தெண்டனிட்டு
அழுகிறது
தன்னம்பிக்கையின்
உச்சத்தை எட்டிட
மறுதலித்து
அழுகின்றது
பீரிட்டு
எழும் சோகக் கற்றைகளை
வர்ணமுள்ள
வானவில்லாக்க
மழைத்துளிக்குத்
தவங்கிடக்கும்
முத்துச்சிப்பி
போல
தடம்மாறிப்
போனதால்
தடுமாறிக்
கதறுகின்றது
இதன்
தேடல் என்ன
ஆதியில்
பிறந்த அந்தம்போல
ஏனிந்த
நாத பேதம்
எதைத்தேடி
இந்த இரைச்சல்
அலைச்சல்
ஓய்ச்சல்
வானவில்
மடிப்புக்களில்
ஏனிந்த
வண்ணக் குழப்பம்
சீதையை
மணமுடிக்க
வில்லை
முறிக்க எழுவது இராவணனா
இல்லை
இல்லை அது… இராமன்தான்
ஆம்
இது அந்தத்தில் பிறந்த ஆதி
இதற்கு
முடிவில்லை
இதுதான்
மானுடம்
இதனால்
இப்படித்தான்
இருக்கவியலும்
இதன்
யதார்த்தத் தேடல்கள்
கானல்நீர்த்
தேங்கல்கள் அல்ல
பாசியாய்ப்
பரந்து படர்ந்து
பற்றிக்கொண்டு
யாசிக்க
யோசிக்க பூசிக்க
ஒரு
சினேகஜலம் அகப்படாதா
மடங்கும்போதெல்லாம்
நிமிரவைக்க
அண்டத்தை
ஆண்டாலும்
தாயின்
அணுவில் உருவானதுதானே
மானுட.ம்!
நேசமென்னும்
வாசமொட்டைக் கண்டதும்
பாசமாய்
ஒட்டிக் கொள்ளும் தோசமுள்ளது
விஞ்ஞான
மாறுதல்கள்
மது
மாது புகழ் எல்லாம்
அலுத்துவிட்டது
இதற்கு
இதற்குத்
தேவை
அன்னையின்
மடி
ஆறுதலான
அரவணைப்பு
அம்மாஆஆஆஅ
!
நீ எங்கிருக்கின்றாய்..
?!?!?!
இது
தன்னுள்ளே
மெல்ல
மெல்லக்
கலைந்துகொண்டே
இருக்கின்றது
சாயத்தை
உமிழும் ஸ்வர அழுகையாய்
கணப்புக்குள்
கட்டிப்போட்ட புறாக்குஞ்சாய்
சாதனைச்
சிகரங்களில் வெற்றிக்கொடியை
நாட்டியிருந்தாலும்
உள்ளுக்குள்
உடைந்துபோய்
உருகி
ஓடிக்கொண்டிருக்கும்
இதை
நிலை நிறுத்த
இதயத்தை
அன்பென்னும்
இனிமைச்
சரிவுகளில் நிறைவுபடுத்த
நிசம்ம்ம்ம்ம்மாய்
( நிதரிசனமாய்)
நீ
வரமாட்டாயா
அம்மாஆஆஆஆஆஆஆஆ
!!!!!!!!!
-- 85 ஆம் வருட டைரி. தமிழ் அசைன்மெண்ட்.
-- 85 ஆம் வருட டைரி. தமிழ் அசைன்மெண்ட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))