புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஆசை:-AGONY:-

வானம் மிச்சம் வைக்காமல்
மேகம் விழுங்கி முடிக்கும்.
மரங்கள் தாகம் தீரக்
காற்று உறிஞ்சும்.
வெய்யில் நாவு சுழற்றிப்
பசுமை தின்னும்.
மழைத் தேங்கலை
மண் அவங்காய்ந்து
அள்ளிச் சொருகும்.
ஆழவயிற்றுள்.
காலம்
கடிகாரத்தின் நேரங்களை
அவசரகதியில் ஏப்பமிடும்.
மண்ணை
எறும்புப் புற்று
ஆக்கிரமிக்கும்..
மனத்தொப்பைக்கு
தின்னக்கிடைக்காமல்
ஆசை அமிலம் சுரந்து
வயிறரிக்கும்.

-- 1985 ஆம் வுடைரி 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...