எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 13 மார்ச், 2016

புதியதோர் உலகம் செய்வோம்:-



புதியதோர் உலகம் செய்வோம்:-

சில கன்னிப் பூக்கள் வடிக்கும்
கண்ணீர்ப் பூக்கள் கைகளின் அரவணைப்பின்றியே
காய்ந்த பூக்களாய் உதிர்ந்து விடுகின்றன.

சில வெள்ளைப் பூக்கள் சிந்தும்
வெந்நீர்ப் பூக்கள்தான் அக்கிரமப் ப்ரதேசங்களில்
வெள்ளப் பூக்களாய்ப் பிரசவிக்கின்றன

கண்ணீரின் சமாதிகளில் புதியதோர் உலகம் செய்வோம்.

சில கல்லூரிப் பூக்கள் கண்வழியே
காதற்பூக்களில் கலந்து உறவாடிப் பெற்றெடுத்த
கள்ளப் பூக்களின் கதியென்ன

சில வாலிபப் பூக்கள் மயக்கத்தில்
வரதட்சணைப் பூக்களை எண்ணியே
வாழ்க்கைப்பூவை சிதைத்துக் கொள்வதென்ன

மயக்கங்களின் கல்லறையில் புதியதோர் உலகம் செய்வோம்.

சில மாணவப் பூக்கள் எப்போதும்
போராட்டப் பூக்களையே பூசித்து
விடுமுறைப் பூக்களையே விரும்பிப் பெறுவதேன்

சில ஊழியப் பூக்களும் சில சமயம்
உள்ளப் பூக்களை ஒளித்து வைத்துவிட்டு
ஊழல் பூக்களில் ஊறிப் போவதேன்

ஒழுங்கீனங்களின் சுடுகாட்டில் புதியதோர் உலகம் செய்வோம்.

சில நடிகைப் பூக்கள்தான் நாளைய
நாட்டுப் பூக்களுக்கு வழிகாட்டிகள்
“புதியதோர் உலகில்”
உடைப்பஞ்சம் ஏற்படாமல் தடுக்க
பிறப்புடையையே புதுவகை உடையாய்க்
காட்டிய ஆதர்ஷ வழிகாட்டிகள்

சிறிது நாளில் சிலுக்கின் உடையே
எங்கள் தேசிய உடையாகிவிடும்.
பாடல்களின் முக்கல் முனகல்களே
எங்கள் தேசிய கீதத்தின்
ப்ரதான உச்சரிப்புகளாம். !

ஒரு நாளைக்கு ஆறே ஆறு வேளை
மட்டுமே சாப்பிடும் நிம்மதி கிடைக்கா
ஏழைகள் இருப்பதால்
பட்டினி விருந்தருந்தி பசியின் நாயகராய்
நிம்மதியின் மொத்தப் பணக்காரராய் உள்ளோம்

இப்படி நாங்கள் எத்தனை பேருக்கோ
கடமைப்பட்டுள்ளோம் நன்றி கூற.!

நாங்கள் புதியதோர் உலகில்தானே இருக்கிறோம்.
இனியும் ஒரு புதிய உலகமா.
வேண்டாம் வேண்டாம்
இதுவே போதும்
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. 

-- 83 ஆம் வுட ைரி 


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...