இருட்டு.:-
எறும்பாய்
ஊறும்.
தவிடாய்
அப்பும்.
மை டப்பாவை
மூஞ்சியில்
திணித்தாற்போல
கடலோரக்
கரைப் பகுதியாய்
நிலத்தைவிட
உயரம் காட்டும்.
கடலாய் பயமுறுத்தும்.
கடலாய் பயமுறுத்தும்.
பயங்களையும்
சந்தேகங்களையும்
விழுங்கி
அடைத்து
வைத்துக்கொண்டிருக்கும்.
பஞ்சாலையின்
அழுக்காய்
நுரையீரலில்
பயம் சேர்க்கும்.
சுவாசம்
நிரப்பும்
மன இருள்
கெட்ட
எண்ணம் கண்டு
வெளிச்சம்
விரட்டி
உடல்
சாப்பிட்டு
மனித
மூளை கொறித்துக்
கொக்கரித்துக்
கிடக்கும்.
இது
புற நிகழ்வல்ல.
அகநிகழ்வின்
வெளிப்பாடு.
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))