எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 மார்ச், 2016

எதிர்பார்ப்பு:-



எதிர்பார்ப்பு:-

நாற்காலி ஆடும்.
மூன்று காலில்
அது வலப்பக்க சிறகொடிந்த
பக்ஷி போல.
நாற்காலி வேண்டும்
நாலாவது கால் பெற.
தச்சன் தரவில்லை
மறந்துவிட்டான்
நான்காவது காலை.
எந்த மனிதனுக்கும்
செய்யவும் தெரியவில்லை.
அது உலகமெல்லாம் தச்சன் தேடி
மூணேமுக்கால் கால் பெற்றது.
என் செய்ய ?
நொண்டி நொண்டிதானே.?
மீண்டும் பழைய தச்சன் பார்க்க
செப்பனிட்டுக் கொள்ள
மூன்றுகாலும் உடையவேண்டும்.
அது உடைகின்றபோது
உடையட்டும்.
அதற்குமுன்னால்
இதை முழுமைப்படுத்த
தச்சன் கிடைக்கணுமே.

-- 82 ஆம் வுடைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...