2. கவிஞனே !
உன்னால் எவ்வளவு தொல்லைகள் !
நாட்டில் பற்றாக்குறை
பரந்து கிடக்கும் போது
நீ கனவுகள் அதிகம் காண்பதல்
கற்பனைகள் அளவுக்கு மீறி செய்வதால்
அதிகம் எதிர்பார்ப்பதால்
காகிதங்கள் குப்பைகளாகி
பேனாக்கள் மையக்
கக்கி எரிக்கின்றன.
நாட்டில் எல்லாமே
பற்றாக்குறையாய்
விலை உயர்ந்ததாய்
இருக்கும்போது ( தன்மானம் கூட )
உனக்கு மட்டும்
உனக்கு மட்டும்
வளமான கற்பனைகள்
எங்கிருந்து விலைக்குக்
கிடைக்கின்றன. ?
நியாய விலைக் கடையிலா ?
மலிவு விலைக் கடையிலா ?
ஒரே விலைக் கடையிலா ?
என் கண்கள் இன்றும்
உப்பு நதிகளையே
உருவாக்கி
ஓட விடுகின்றன..
விழிகளுக்குள் நீ சின்னதாய்
மிகச் சிறிய துரும்பாய்
வீழ்ந்து மாட்டிக் கொண்டாய் பாரதியே !
எனவே இமைக்கதவுகள்
அமைதியாக மூடாமல்
புரட்சி செய்யப்
படபடக்கின்றன.
ஓ ! புது யுகம் காணலாம்
வா ! என்னருமை பாரதியே !
யுகக் கவிஞனே !
உன்னுடைய ஏக்கங்கள்,
புலம்பல்கள்,
ஏமாற்றங்கள்,
எதிர்பார்ப்புகள்,
ஆசைகள்
கவிதையாக உருப்பெறும் வேளையில்
மக்கள் நெஞ்சில் காவியமாக
செதுக்கப்படும் வேளையில்
நீ
கதையாகிப் போன கதை
யாரறிவார் ?
அலையான உணர்ச்சிகள்
கலையாக வடியும் நேரத்தில்
நீ
சிலையாகிப் போன நிலை
யாரறிவார் ?
புதுயுகம் காணலாம் !
வா ! என்னருமை பாரதியே !
வா ! என்னருமை பாரதியே !
நீ கனவில் கண்ட
இளைய பாரதத்தை
அதன் வேலையில்லாத் திண்டாட்டத்தை
நனவில் கண்டால்
நீ கனவு கண்ட புதுமைப் பெண்களை
அவர்களின் நவநாகரீக மோகத்தை
நேரில் கண்டால்
நீ கனவு கண்ட பாரதத் திருநாட்டை
அதன் பசியைப் பட்டினியைப்
பிணியைப் பஞ்சத்தை
நேரில் கண்டால்
நீ தற்கொலை புரிந்து கொள்வாய்..
அப்படியும் உனக்கு ஆசையிருந்தால்
ஓ ! புதுயுகம் காணலாம்
திரும்பி வா ! என்னருமை பாரதியே !.
-- 83 ஆம் வருட டைரி
-- 83 ஆம் வருட டைரி
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))