தென்றல் வீணையின்
நரம்பு தேடும்
மாலை நேரத்தில்
புதிய அரும்புகளுக்கு
மனம் முகிழ்த்த வணக்கங்கள்
மலர்ந்த மலர்களுக்கும்தான்.
இது சங்கம் வளர்த்துச்
செழித்த மதுரையில்
தமிழ் வளர்க்கும்
ஃபாத்திமா விருட்சத்தில்
தமிழ் பயின்ற குயிலின் கீதம்.
சோக கீதமல்ல. இனிய கீதம்தான்
இன்ப நாதம்தான்
அலுத்திருக்கும் உங்களைக்
கழுத்தறுக்க வரவில்லை
இன்று உங்களுக்கு ஆரம்பநாளை
ஆரம்பிக்கத்தான் வரவேற்கத்தான்
கனிவாய் வழிகாட்டத்தான்
வந்திருக்கிறேன்.
AICUF என்னும் சங்கம் பற்றி
அறிந்து கொள்ளும் புனித நாள்.
அந்த நாள்
மனங்களை உணர்ந்தபின்
மதங்களுக்கு அர்த்தமில்லை
என்று உணர
சமய வேறுபாடின்றி அனைவரையும்
ஒன்று சேர்க்கும் நன்னாள்.
AICUF இன் முயற்சியால்
நம்பிக்கை ஒளியாய்
வைகறையின் உதயம்.
முட்களின் குத்துப்பட்டாலும்
ரோஜாக்களைப் பிரசவிக்கக்
கற்றுத் தருவது AICUF.
பரந்த எண்ணங்களைப்
பகிர்ந்து கொள்ளும்
சிந்தனைக் கருத்தரங்குகள்
உண்டு இங்கே !.
மலட்டு மனிதச் சிப்பியிலும்
எண்ண முத்துக்களை
மலரச் செய்வதுதான் AICUF.
மதத்தைப் பார்க்காமல்
மனிதனை மனிதனாய்ப்
பார்ப்பதுதான் AICUF.
எல்லார் மனதிலும்
பொறுப்புண்டு என
செயல்பட வைப்பதும்
AICUF.
உங்களுக்கும் பொறுப்புகள்
கூடுகின்றன.
இந்நாளில் இருந்து
அதன் அங்கமாய் மாறும்
பெரும்பேறு உங்களுக்கு.
இந்த நாள் முதல்
இருக்கும் நாள் வரை
ஆணிவேரைச் செப்பனிட்டு
வைத்துள்ளோம்
சிந்தனைக்காய்களை
எறிந்துள்ளோம்.
சிந்தனைச் சுழிகள்
அடங்குவதற்கு.
நாங்கள் எறிவது
குளத்திலல்ல.
உங்கள் மனத்தில்
காய்களைக் கனிகளாய்ப்
பழுக்கவைக்கும் பொறுப்பு
உங்கள் கரத்தில்.
இந்த இனிய மாலையில்
இன்ப கீதங்களில் பிரியமான
வரவேற்பு வாழ்த்துக்களைப்
பகிர்ந்துகொண்டு
என் கவியுரையைத்
நிறைவாய்த் தருகிறேன்.
அன்பு வணக்கம்.
-- 84 ஆம் வருட டைரி.