அது ஒரு அந்தியா..?
தனிமையின் வெம்மைச்சூட்டில்
பரிதவித்துப் போகின்றேன்.
மனசு முழுக்கப் பயம் பயம் பயம்.
தீவாந்திர மடுவில் மாட்டிக்கொண்ட
வேதனையில் வலி வலி வலி.
வேகத்தின் பரிணமிப்பில்
இழுத்துவிட்ட சூடு.
இரணங்கள் ஆறவில்லை
இரத்தங்கள் காயவில்லை.
மறந்துபோன வேதனையின்
தழும்பு நினைவுகள்.
மனசு முழுக்கப் பயம் பயம் பயம்.
யாருமில்லாத காட்டில்
சூன்ய வெளியில்
மரங்களின் இரைச்சலில்
நடுங்கிப் போகிறேன்.
கூட்டத்தில் தலைகளுக்கு இடையில்
முகங்களுக்கு மத்தியில்
மூச்சிழந்து தவிக்கிறேன்.
மனிதக் கூட்டங்கள் இறைச்சல்கள் !
எல்லாம் வெறுப்பேற்றுகின்றன.
என்று தனிமை கிடைக்கும். ?
மனசு முழுக்கப் பயம் பயம் பயம்.
ஊன மனசின் முணங்கல் மட்டும்
ஊசியாய்த் துளைக்க
என்ன செய்வதென்று புரியாமல்
எண்ணப் படலங்கள் திடுதிடுக்க
விதிர்விதிர்த்த உடம்பும் மனசும்
விசித்து விசித்துப் புலம்ப
ஒரு ஆறுதல், மனசு தேட
நம்மை நேசிப்பவரை எல்லாம்
நம்மாலும் நேசிக்கமுடியும் என்ற
அறிஞனின் கூற்றில் மனசு பரபரக்க
பிடிவாதம் பிடித்து அழ
கிடைத்த சிநேகிதத் தளும்பலில்
சின்னப்பையனாட்டம் துள்ளாட்டம் போட
ஹே என்ன இது எனக்கு என்ன ஆயிற்று. ?
ஓ.. ! நானொரு அத்திமரம். !
பூத்தும் காய்க்காத அத்தி மரமன்றோ.?
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
அருமை! வாழ்த்துக்கள்!
நன்றி சுரேஷ் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))