சுட்டுவிரல் அழைப்பில் :-
விரலசைப்பில் மயங்கிய
நாகமாகின்றேன்.
நாகமாகின்றேன்.
நினைவு வெளிகளில்
நெஞ்சின் சுரங்கங்களில்
நர்த்தனமிட்டு நர்த்தனமிட்டுச்
சுண்டி அழைத்தது உன் அழைப்பு.
என்ன ஏதென்று சிந்திக்காமல்
ஒரு கணத்தில் அடிமையாகிப்
போய்விட்டேனே உனக்கு. ?
வெளியில் முறைத்துக்கொண்டு
உள்ளுக்குள் சலாமிடும்
ஊமை அடிமையாய்
எப்போது மாறினேன். ?
என்னையுமறியாமல் எப்போது
என் இதயச் சபையில் புகுந்து
என் சம்மதமின்றி
சிம்மாசனத்தில் அழுத்தமாக அமர்ந்து
அட்டனக்காலிட்டு எப்படி
ஆட்சி செய்கின்றாய்..? ஹூம்
உன்முன் நான் கம்பீரமாக
இருக்க முயன்றும் தோற்றுப்போகின்றேன்.
உன்னுடன் எனக்கு நடந்த
சதுரங்கப் போட்டியில்
சிந்தனை மந்திரியை இழந்துவிட்ட
ஏமாளி இராஜாவாகிப் போனேன்.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
3 கருத்துகள்:
ம்ஹீம்.... சிரமம் தான்....
கருத்துக்கு நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))