எத்தனை கோடி இன்பம் வைத்தாய் :-
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் பெண்ணே !
எத்தனை கோடி இன்பம் வைத்தாய். !
பெண் பார்க்க அவன் வரும் சேதி கேட்டு
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
அவன் வந்தான் அமர்ந்தார்ன்
இவள் சென்றாள் நின்றாள்
கண்ணோடு கண் நோக்க
வாய்ச்சொற்கள் பயனற்று விட்டதோ ?
நடைமுறை வணக்கமும்
காஃபி டிபனும் முடிந்து
பேரங்கள் பேசப்பட்டு
விடைபெற்றுச் சென்றுவிட்டான்
போய்க்கடிதமெழுதுவதாகக் கூறி. !
இவள் தன் கண்களில் கனவு மையெழுத
இதயம் வானில் சிறகடிக்க
உலகமே திடீரென்று மாயாபுரியாய்
மாறியதாய் எண்ணி
தென்றல் உடலைத் தழுவ
கால்கள் தரையி பாவாமல்
புதிதாய்ச் சிறகடிக்கக் கற்ற சிட்டுப் போல
எத்தனை கோடி இன்பம் வைத்தவளாம்.
சின்னச்சிட்டு தன் சிறகொடிக்கப்பட்டதுபோல்
கப்பல் கவிழ்ந்தது போல் ஏனடி கிளியே உள்ளாய். !
ஓ !
உனது தந்தையால் அவன் வீட்டார்
உன்னை வாங்கிக் கொள்ளக் கேட்ட
செல்வத்தைக் கொடுக்க முடியாததாலா ?
செல்வமே !
அந்த நதியின் பிறப்பிடம்
உனது கண்கள்தானோ
என ஐயுறுகிறேன் அடி.!
உன் கண்ணில் இப்போதுதான்
வாழ்வின் வறுமையெனும்
நிதரிசனத்தின் நிழல்
தெரியவாரம்பித்து இருக்கின்றதடி. !
பெண்ணே !
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் !
அதிக எதிர்பார்ப்பு இருக்குமிடத்தில்
அதிக ஏமாற்றமும் அவசியம் உண்டடி. !
எத்தனை கோடி இன்பம் வைத்தாய். !
அத்தனையும் பொய்யாய்ப் பழங்கனவாய்க்
கதையாய்ப் போனதடி. !
-- 83 ஆம் வருட டைரி
5 கருத்துகள்:
எதுவும் கடந்து போகும்...
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நன்று நன்றி சகோ
நன்றி கில்லர்ஜி சகோ
நன்றி டிடி சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))