வான இராஜ்ஜியத்தில்
இருளரசனை வரவேற்கும்
மாலைநேரத்துத் தாரகையே !
வைகறைப்போதில்
வையோனை வரவேற்கும்
உதயத் தாரகையே. !
தனிமை உனக்குமட்டும் உரிமையல்ல !
அதன் பங்குதாரி நானும்தான். !
~~~~~~~~~~~~~
வாடகைப் பெண்.
**************************
**********************************************
வாடகைப் பெண்.
**************************
எங்கள் வானில்
நிலவு சிரிக்குமென நினைத்தோம்.
ஆனால் புன்னகைப் பூப்பொரிக்க வந்தவை
அக்கினி நட்சத்திரங்கள்தான்.
எங்கள் உடல்கள் பாழ்பட்டிருக்கலாம்.
ஆனால் மனம் பழுதுபடவில்லை.
எங்கள் உடலில் மாசுபடிந்திருக்கலாம்
ஆனால் மனம் மாசுபடவில்லை.**********************************************
டைவோர்ஸ்:-
சின்னச் சிட்டுக்களின்
சிறகடிப்புக் கீதங்கள்.
கீதங்களின் நடுவில்
நாதங்களின் புலம்பல்.
புலம்பல் சங்கீதம்
பெற்றுப்போட்ட புத்திரிகள்
புத்திரிகள் வாழ்விலோ
அபஸ்வரத்தின் சோகங்கள்
சோகங்களின் கெக்கலிப்பில்
சந்தோஷங்கள் இடைச்செருகல்
இடைச்செருகல் ஏற்படுத்தும்
சிறகடிப்புக் கீதங்கள்.
---------- 85 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))