எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 மார்ச், 2015

என்னுடைய நீ..



என்னுடைய நீ:-
****************************
உன் நினைவுகள் எனக்குள்
ஒளிந்தும் தலைநீட்டியும்
பிச்சைக்காரனின் தங்கக்காசாய்.

தலைநகரக் குளிரில் நீ
உன் வெப்ப நினைவுகளுடன் நான்

என்ன வாங்கி வருவாய்
பிள்ளைகளின் கவலை.

எப்படி இருக்கிறாய்
என்னுடைய கவலை

பகல் ஆமை கூட்டுக்குள்
ஒடுங்கும்போது
என் மனநத்தை ஊரும்
உன் நினைவைச் சுமந்து.

உள்ளும் புறமும்
நீயே இருக்கிறாய் என்பதை
உணரக் கிடத்த அவகாசம் இது.

மனவெளிகளில்
உலாவும்போது உன்
மார்பு ரோமம் முகத்தில் கதகதப்பாய்.

என்னுடைய முதற்குழந்தை நீ
எப்படி உண்கிறாய் உடுத்துகிறாய்
உறங்குகிறாய் நானில்லாமல்.

முடிகிறதா உன்னால்
என்னால் முடியாதது எல்லாம்.

ஆண்மை முரசடிக்கும் உன்
தோளைக் கடிக்க வேண்டும்
முரட்டுக்கை பிணைக்க வேண்டும்
சீக்கிரமே வந்து சேர் கண்ணா.


-- 95 ஆம் வருட டைரி :) :) :) 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஓஹோ...!

ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...