சருகுப்
போர்வையுரித்து
மண்பூ
புஷ்பிக்கும்
மண்புழுப்பூச்சிகளுடன்
வேர்கள்
வெளித்தெறித்து
சலசலக்கும்
பொடிக்கற்கள்
மேற்பரப்பில்
வெங்காயத்
தோலிகளாய்
நிறம்
மாறி
நீண்டுகொண்டே
போகும்
அடுக்கடுக்காய்
அழுக்குகளையும்
சக்கைகளையும்
கெல்லி எறிய
நன்மைகள்
பாறைகளாய்
உறைந்து
நிற்கும்.
மண்
அடுக்குப் போட்டுத்
துகில்மூடி
சருகுப் (பூ) போர்வை
போர்த்துத்
துயிலும்-- 84 ஆம் வருட டைரி
2 கருத்துகள்:
நன்றி தளிர் சுரேஷ் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))