சில ஒற்றுமைகள்.
காதலுக்குக் கண்ணில்லை. உண்மைதான். அதனால்தான் நாமிருவரும் குருடராய்ப் பிறப்பெடுத்தோமோ.
காதலுக்கு ஜாதி பேதமில்லை. ஆமாம் அதனால்தான் குப்பைத்தொட்டிகளின் வாரிசுகளாய் உருவெடுத்தோமோ.
காதலுக்குப் பணக்காரன் ஏழை என்ற வித்யாசமில்லை. அதனால்தான் அன்பு உருவானதோ.
மண்ணில்
பிறந்தோமென்பதற்காக மண்ணிற்கு உணவாகிப் போகிறோமென்பதை உணர்த்துவதற்காகத்தன் மண்ணே நம்
நித்திய உணவாகிப் போனதோ.
நடைபாதைகளும் புழுதிப் படலங்களுமே நம் நித்தியக் கட்டில்கள்.
கூவம் நதிக்கரைப் பக்கமே நம் குடித்தன வாசஸ்தலங்கள்.
பட்டினி இரவுகளின் ஓலம் ஊமைப்புலம்பல்கள்.
பொறுக்கமுடியாமல் ஊற்றுத் தோண்டி நீர் குடிப்பு.
குடிக்கும்போது உப்புக்கரிப்பு. அது நம்மைப் போலவே பலபேரின் குருட்டுக் கண்கள் உதிர்த்த
முத்துக்களாம்.
மனதுக்கு ஒரு சுகமளிப்பு. அவர்களைப் போலல்லாமல் எனக்கு நீ ஒரு துணையாய்
இருக்கும்போது இந்தச் சில ஒற்றுமைகள்தான் நம்மைச் சேர்த்து வைத்ததோ. அதனால்தான் நெஞ்சங்கள்
உறவாடினவோ.
நம்மிடையே பகிர்ந்துகொள்ள வேறென்ன இருக்கிறது. அன்பைத் தவிர.
-- 1984 ஆம் வருட டைரி.
-- 1984 ஆம் வருட டைரி.
5 கருத்துகள்:
உலகையே வியக்க வைத்த புத்தம் புதிய குறும்படத்தின் பெயர். இந்த குறும்படம் ஜூன் 2015 தான் ரிலிஸ் ஆகும். ஆனால், இந்த குறும்படம் மிக பிரமாண்டமாக இருக்கும். இந்த குறும்படத்தின் பெயரைப் பார்க்க :- https://www.youtube.com/watch?v=6uqSozz48Ac
இந்த Channelக்கு Subscribe செய்வதன் மூலம் நீங்கள் இந்த படத்தைப் பார்க்கலாம். நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!!
www.youtube.com/thevashokkumar
#Tamil #Tamilshortfilm #tamilfilm #shortfilms #tamilfilms #lingaa #Chennai #Youtube
அன்பே அனைத்தும்...
வாழ்த்துக்கள்...
நன்றி அஷோக் குமார்
நன்றி தனபாலன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))