மீண்டும்
நானுனக்கு
எழுதுகிறேன்.
ஏனெனில்
நான் என்னுடனே
போராடிக்கொண்டிருக்கிறேன்.
நெரிசல்களுக்குள்
வார்த்தை
அரைத்தல்களுக்குள்
துணுக்குகளாய்க்
கிடக்கும்
என்னை
– ’நானை.’ த்
தேடிக்கொண்டிருக்கிறேன்
மீட்டுக்கொள்ளத்
தவிக்கிறேன்.
உன்
உபதேசங்கள் கிணற்றடிவாரங்களுக்குள்
சொரிந்து
கழுவும் அழுக்காய்க் கரைந்தன.
உப்புத்தாள்களாய்
வேதனைகள் அரிக்க
மரப்பலகையாய்
கற்சுவராய்
நான்..
ஓ
இந்த
மாற்றம்
நிகழ்ந்தது
எப்போது. ?
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))