எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 நவம்பர், 2014

ம(றை)றந்து போனது.



ம(றை)றந்து போனது.

குளிருக்குத் துண்டுகட்டித்
தலைபோர்த்திச்
சாலையோரம் குந்தி
வெளிக்குப் போகும்
மைல்கற்கள்.

சிறியதாய்ப் பச்சையம்
சேர்ந்திருக்கும்போதே
பாகம்பிரித்து
வைக்கும் புற்கள்

காதைத் திருகி
கிசுகிசுக்கும் குளிர்

பஸ்விட்டுத் தோள் தாவி
தோள்விட்டுப் பஸ் தாவும்
குட்டி அரசியல்வாத
BAG குகள்


வெளிச்சம் கக்கிச்
சாலை விழுங்கிச்
சலித்துப் போகும் பஸ்கள்.

கம்பம் நட்டுக்
கயறு கட்டி
காலுதைத்து
ஊஞ்சலாடும்
வால் குருவிகள்

கரிகால் வளவனாய் நின்று
பசுந்தோகை விரித்தாடும்
மயில்களாய்க் கரும்புகள்.

இருட்டுச் சொத்தை
அவசரமாய் அபகரித்துப்
புதைத்துக் கொள்ளும்
வெட்டவெளி.

மறந்து போனது
மறைந்து போனது
என் முகம்.

-- 84 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கரிகால்வளவனாய் நின்று பசுந்தோகை விரித்தாடும் கரும்புகள்! உவமை அழகு! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தளிர் சுரேஷ். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

சாய்ரோஸ் சொன்னது…

சூப்பர்... பயணத்தினூடான இயற்கையை இதைவிட அழகாய் கவிதையில் வடித்தல் கடினம்தான்... மிக அழகு....

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...