எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 நவம்பர், 2014

கரையோர முதலைகள்

கரையோர முதலைகள்:-

கண்ணீர் வடித்துக்
கால்பற்றி இழுக்கும்
எத்தனை கரையோர
முதலைகள்.

மாமிசம் குதறும்
முதலைகள்.
அத்தனையும்
துர்நாற்ற முதலைகள்.

போலியாய்ச் சிரித்து
போலியாய் அழும்
இரப்பர் முதலைகள்.

மௌனமாய்க் கண்மூடிக்கிடந்து
சவமாய் நடித்துச்
சமயம் பார்த்துப்
பற்றி இழுக்கும்
சந்தர்ப்பவாத முதலைகள்.

ஒட்டுறவு கொள்ள
மௌனமாய்ப் பார்த்து
உள்ளம் உருகி
அழுவதாய்ப் பாவனைபண்ணும்
நடிப்பு முதலைகள்.

முதலை விழுங்கி ஏப்பம்விட்டுச்
சுகமாய்ச் சாய்ந்து 
ஓட நோட்டம் பார்க்கும் 
கயவாளி முதலைகள்.

நீண்டமுகமும்
நாற்றக்கோரைப்பற்களும்
சடைப்பிடித்த முள்ளுடம்புமாய்
நாவில் நீர்சொட்ட
அடுத்தவனின் அழிவுக்காய்ப்
பூசனைபண்ணும் பிரார்த்திக்கும்
எண்ண முதலைகள்.

பல்லில் மாட்டிய
மாமிசம் கொத்தப்
பறவை அழைத்துக்
கொத்தல் முடிந்ததும்
பறவை மெல்லும்
நாசகார முதலைகள்.

முதலைகள்
ஏமாற்றுக்கார முதலைகள்
மனசுகளைக் கொத்திக்கிளறி
உண்மை கண்டுபிடிக்கிறேனென்று
புரட்டிப் புரட்டி அடிக்கும்
இரக்கமில்லா இராட்சச முதலைகள்.

-- 84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...