3. மதியழகன் முகபாவம் :-
பூமித்தாயின் தாலாட்டில்
சந்திரக் குழந்தை
வானத் தொட்டிலில்
தூங்குகின்றது.
மேகக் குவியல்கள்
மூடியதால்
சந்திரக் குழந்தை தும்ம
பரந்து சிதறிக்கிடக்கும்
எச்சிற் துளிகளோ
நட்சத்திரங்கள். !
சூரியத் தந்தைக்குப்
பயந்துகொண்டு
பூமித் தாயின்
நிழல் முந்தானையில்
மாதமொருமுறை
மறைந்துகொள்கிறானோ ?
இரவில் ஆடித்திரிந்து
அழகு காட்டி மயக்குபவன்
குறும்பு சேஷ்டை புரிபவன்
பகலில் ஓடி ஒளிந்து
விளையாடுவதேன் ?
இரவு தோறும்
குளக் கண்ணாடியில்
தன்னுடைய
உருவக் கலங்கல்களைப் பார்த்து
கீற்றுப் புன்னகை புரிகிறானோ ?
-- 85 ஆம் வருட டைரி
-- 85 ஆம் வருட டைரி
2 கருத்துகள்:
நவீன தொழினுட்ப வளர்ச்சியில் புதுப் பொலிவுடன் மீண்டும் இணையத்தை கலக்க வருகிறது தமிழ்BM இணையம். உலக இணையதளப் பெருக்கத்தில் உங்கள் இணையதளங்களை விரைவில் வாசகர்கர் வசப்படுத்த எம்மால் முடியும்.
ஒருமுறை எமது இணையத்துடன் இணைந்தால் உங்கள் இணையப்பக்கங்களை நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பார்வையிடச் செய்ய நாம் தயார்.
பதிவுகளுக்கு முந்துங்கள்
எமது இணையம் தொடர்பான பழுதுகள், முறைப்பாடுகளை உடனடியாக பதிவு செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் எங்கள் தொழினுட்ப அலுவலர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவுவார்கள்..
நன்றி
தமிழ்BM
www.tamilbm.com
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))